November 28, 2016
மனைவியை கொல்ல முயன்ற கணவர் தற்கொலை
மனைவி | மன அழுத்தம் | மகன் சாட்சி | கொலை முயற்சி | கள்ளத்தொடர்பு சந்தேகம் | கத்தி குத்து | கணவர் தற்கொலை | கணவன் |
கல்யாண்: மும்பை கல்யாண் நகரில் வசித்து வரும் தொழிலதிபர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர், பதட்டத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேந்திர ஷிண்டே(45) எனும் தொழிலதிபர் தனது மனைவி சங்கீதா (42) வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு கடந்த சில நாட்களாக கடும் மன கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே பலமுறை சண்டை ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடை வைத்திருக்கும் இவருக்கு சேட்டன்(19) என்ற மகனும், (10) வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
ஏற்கனவே கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மகாத்மா புலே காவல் நிலையத்தில் கணவர் துன்புறுத்துவதாக சங்கீதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர ஷிண்டே கைதானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திர ஷிண்டே , சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மகனும், மக்களும் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து இருவருக்குமிடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த ராதேந்திர ஷிண்டே கத்தியால் சங்கீதாவை குத்தி தாக்கியுள்ளார்.
அப்போது தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சேட்டன், கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது ராஜேந்திர ஷிண்டே சங்கீதாவை கத்தியால் குத்தியதை பார்த்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ராஜேந்திர ஷிண்டே பால்கனிக்கு சென்று கீழே விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். 8வது மாடியில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே ஷிண்டே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடித்த சங்கீதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப்பிறகு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டிய அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை கொல்ல முயன்ற கணவர் தற்கொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.