November 8, 2016
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல்
சபரிமைலை ஐய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கருத்து தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்கிற ஐதீகத்தை சபரிமலை தேவஸ்தானம் கடைபிடித்து வருகிறது. இந்த நடைமுறைக்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது சபரிமலை சன்னிதானத்திற்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கேரள அரசு மேற்கொண்ட நிலைப்பாடு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு கேரளாவில் இடது சாரி கூட்டணி அரசு நடைபெற்றபோது சபரிமலைக் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்கிற கருத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய இடதுசாரி அரசு அந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.