November 30, 2016
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரியின் காரை வழிமறித்து தாக்கிய மர்ம நபர்கள்!
நாகை அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரியின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள பனங்குடி முட்டம் கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனை முனையம் உள்ளது.
இந்த முனையத்தின் மேலாளராக உள்ள சரவணன், உடன் பணிபுரியும் மோகன் என்பவருடன் தனது வீட்டிற்கு மாருதி காரில் சென்றுள்ளார்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர், காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.
மேலும் சரவணனை பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு, 4 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் கார்டையும் பறித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரியின் காரை வழிமறித்து தாக்கிய மர்ம நபர்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.