November 12, 2016
மோடிஜீ உங்க அறிவ நெனச்சா புல்லரிக்குது….போங்க
எப்படி ஜீ உங்களுக்கு மட்டும் இந்த ஐடியா வந்துச்சு…ஜீ. அம்பானி, அதானி, சுப்பிரமணியசாமி ஏதாவது சைடிஸ் கொடுத்து இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடங்கி வைச்சாங்களா…. ஜீ…
ஏங்க ஜீ.. ஆதார் அட்டைய காட்டி பணத்தை மாற்றிக் கொள்ளலாமுன்னு சொல்றீங்களே…. அப்பறம் ஏங்க ஜீ திடீர்ன்னு 500,1000 ரூபாயே செல்லாதுன்னு சொல்றீங்க.. இனியும் யாராவது 500, 1000 ரூவா நோட்டு வைச்சிருந்தா. அடுத்த மாசம் (டிசம்பர்) 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையோட வங்கில ரூவாய கொடுக்கனும். அதுக்கு பதிலா வேற நோட்டு வழங்குவோம். அதுவரை இந்த நோட்டுக செல்லும். அதுக்கு பின்னாடி செல்லாதுன்னு அறிவித்திருக்கலாமே….ஜீ.
ஒருவேளை கோடிகோடியாக வந்து மாற்றினாலும் யரோட ஆதார் எண்ணுல மாத்துறாங்கன்னு கண்டுபிடிச்சிருக்கலாமே ஜீ. அவங்க மேல நடவடிக்கை எடுத்து ஜெயில்ல போடலாமே….ஜீ.
ஒரு வேள ஆதார் அட்டைய சரிபார்க்கும் வசதி இல்லைன்னு நினைசீ.. ங்களா ஜீ… அதான் ஜீ நாம முகேஷ் அம்பானிகிட்ட கொடுத்திருக்க மொத்த ஆதார் விபரத்தையும் வாங்கி காப்பி போட்டுகளாமே ஜீ. முகேஷ் நம்மகிட்ட சொன்னபடி ஜியோ சிம்மு பேருல மூனு மாசமா கருப்ப வெள்ளையாக்கிட்டாருல்ல ஜீ… அவரு சொன்னபடிதான ஜீ நீங்களும் டிசம்பர் 31 வரை கெடு கொடுத்திருக்கீங்க ஜீ..
ஆமாங்க ஜீ.. எனக்கு ஒரு டவுட்டு… பெரும்பாலான பணம் வெளிநாடுகல்ல… சுவிஸ் வங்கியில… டாலரா இருக்கிறதாமே ஜீ. அத எப்படி ஒழிப்பீங்க ஜீ…. இல்லாட்டி ஒரு ரெண்டு மணி நேரத்துல இனி டாலரும் செல்லாதுன்னு அறிவிச்சிடலாமுன்னு ஐடியா வச்சிருக்கீங்களா ஜீ….
பல பேரு கருப்பு பணத்த தங்கம், வைரமுன்னு மாத்தி வைச்சிருக்காங்கலாம் ஜீ.. இனி தங்கம் செல்லாதுன்னு அறிவிச்சிடலாமா ஜீ.. இனிமே காவி டைமண்ட் மட்டுந்தான் செல்லுமுன்னு சொல்லிடலாம் ஜீ…
அதுமட்டுமா ஜீ… தொழில் நட்டமுன்னு மஞ்ச நோட்டீஸ் கொடுத்துட்டு,… கருப்பு பணத்த வைச்சு வேறு பேருல.. புதுசா கம்பெனி தொடங்கியிருங்காலாம் ஜீ. அத எல்லாத்தையும் அகண்ட பாரத் சுதேசின்னு பேர மாத்த சொல்லி கருப்ப வெள்ளையாக்கிடலாம் ஜீ….
அது இருக்கட்டும் ஜீ…
உங்கள பத்தி சரியா புரிஞ்சுக்காமா வகைதொகையா கோடிக்கணக்கான மக்க மாட்டிக்கிட்டாங்களே ஜீ…. அவுக கேட்டா என்ன செய்யலாம் ஜீ.. புரியலையா ஜீ..
அதான் ஜீ.. சாதாரண அப்பாவிக மக்க கிரிடிட் கார்டும் இல்லாமா, டெபிட் கார்டும் இல்லாம இருப்பாங்களே ஜீ.. அவங்க கேட்டா நாம என்ன சொல்றது ஜீ..
ஆத்திர அவசரத்துக்கு ஒதவட்டுமுன்னு ஓரே நோட்டா மாத்தி கடுகு டப்பாவில ஒழிச்சு வச்சிருப்பாங்ளே ஜீ.. டூரிஸ்ட் போகும் போது நிறைய பணத்த எடுத்துட்டு போனா ரிஸ்க்ன்னு பேங்குள 500, 1000 நோட்டா வாங்கி வந்திருப்பாங்களே ஜீ… அவங்க எப்படி ஊரு திரும்புவாங்க ஜீ…
இதுபோல நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருக்கீறவங்கள அல்லாட வைச்சீட்டீங்களே ஜீ. அவனுங்க எல்லாம் கேட்டா என்ன சொல்றது ஜீ.. இதுதான் பாகிஸ்தானை காலி செய்யும் சர்ஜிக்கல் கரன்ஸி ஸ்டிரைக்குன்னு சொல்லி ரூட்ட மாத்திடலாமுன்னு நீனைக்கிறீங்களா ஜீ.
எல்லாம் சரிதான் ஜீ. ஏற்கனவே கருப்பு பணம் வைச்சிருக்கவீங்க பட்டியல் இருக்கில்ல ஜீ.. அவங்க பேர மொதல்ல சொல்லுன்னு யாராவது கேட்டா என்ன செய்றது ஜீ.. உள்நாட்ட காட்டி கொடுத்திட்டன்னு தேச துரோக வழக்கு போடாலாமுன்னு ஐடியா வைச்சீருக்கீங்களா ஜீ..
ஏங்க ஜீ.. எவனாவது ஞபாகம் வைச்சு, அடுத்து சர்ஜிகல் வேகத்துள்ள எப்ப ரூ 15 லட்சம் எங்க அக்கவுண்டுல வந்து விழுமுன்னு கேட்டா என்ன செய்றது ஜீ… அமெரிக்க தேர்தல்ல அதிபரானதும் டாலரா தர்ரேன்னு சொல்லிடலாமா ஜீ…
நம்ம சூப்பர் ஸ்டார் கூட உங்க சர்ஜிக்கல் கரன்சி ஸ்டிரைக்க பாராட்டிருக்காரு ஜீ. இனி அவரு படத்துக்கு டிக்கெட்ல போட்டிருக்க விலையிலதான் விக்க போறாராம் ஜீ.. நீங்க கவலப்படாதீங்க.. அடுத்து புதிய இந்தியா பிறக்க போகுதாம் ஜீ.
அப்ப மோடிங்குற பேர “டிமோ“ ன்னு ரைமிங்கா மாத்திடலாம் ஜீ… அப்படியே கோஷத்தையும் பாரத மாதாவுக்கு கோவிந்தான்னு மாத்திடலாம் மாத்தி யோசிக்கிறீங்களா ஜீ.. .. உங்க அறிவ நெனச்சா… புல்ல ரிக்குது…. ஜீ. ச்ச்… சீசீ…………… ச்சீ…..
மோடிஜீ உங்க அறிவ நெனச்சா புல்லரிக்குது….போங்க
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 12, 2016
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


Totally irrelevant and irresponsible observations
ReplyDelete