Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் நின்றிருந்தாலும் படுகேவலமாக டெபாசிட் பறிபோயிருக்கும்



மதுரை: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையே தேமுதிகவுக்குதான் சரியாக பொருந்துகிறது.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை விட குறைவான வாக்குகளைத்தான் தேமுதிக வேட்பாளரால் பெற முடிந்திருக்கிறது.
திமுக, அதிமுகவுக்கு மாற்று என களமிறங்கியது தேமுதிக... தொடக்கத்தில் தனித்துப் போட்டியிட்டு 2 கட்சிகளுக்கும் ஒரு சவாலான கட்சி என தோற்றத்தை வெளிப்படுத்தியது.
அதளபாதாளம்...
ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பின்னர் அதில் இருந்து வெளியேறியது தேமுதிக.

அதேபோல் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போனது. கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் அணி சேர்ந்தது. இப்படி அணி மாறி மாறி ஓடியதால் அக்கட்சிக்கென இருந்த தனித்துவமான வாக்கு வங்கியும் அதளபாதாளத்துக்கு போனது.


விஜயகாந்த் போட்டியிடனும்
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஞானோதயம் பெற்றவராக பேசிய விஜயகாந்த், தனித்தே போட்டியிடுகிறோம் என அறிவித்தார். அதுவும் திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் நிற்க வேண்டும் என்றெல்லாம் தேமுதிகவினர் அடம்பிடித்தனர்.

படுமோசமான தோல்வி
போன தேர்தலில் கொஞ்சம் கவுரவமான வாக்குகளைப் பெற்று உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டை பறிகொடுத்தார் விஜயகாந்த். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவர் நின்றிருந்தால் பாஜகவிடம் தோற்க வேண்டிய நிலைதான் வந்திருக்கும் என்பதையே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

4-வது இடத்தில்...
திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடக்கத்தில் 3-வது இடத்தில் தேமுதிக இருந்தது. ஆனால் போக போக பாஜக முன்னிலை பெற்று 3-வது இடத்துக்குப் போனது. தேமுதிக 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
இனி சூன்யமான எதிர்காலம்?

திருப்பரங்குன்றம் தொகுதி 12-வது சுற்று முடிவு நிலவரம்:
பாஜக - 3835
தேமுதிக- 2462

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.