November 20, 2016
ஆண்களே எச்சரிக்கை! சிறுநீர் நுரை போன்று வெளிப்படுவது ஆபத்து!
நம் உடலில் எந்த விதமான சிறு பாதிப்பு உண்டானாலும் அதை முதலில் வெளிப்படுத்துவது சிறுநீரும், மலமும் தான்.
உங்கள் உடல் உறுப்புகள் சரியாக செயல்படாவிட்டால், நீங்கள் தவறான உணவுகள் உட்கொண்டிருந்தால் மறுநாள் காலையில் முதல் அறிகுறியாக தென்படுவது சிறுநீர் மற்றும் மலம் தான்.
காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி அறிகுறியை வெளிப்படுத்தும்.
மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும். அதே போல சில சமயத்தில் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிப்படும், இது எதனால் தெரியுமா?
புரதம்
சில சமயம் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று தென்பட நேரிடும். இதை நாம் மிக சாதாரணமாக கருதுவது உண்டு. ஆனால், இது புரோட்டினூரியா எனப்படும் சிறுநீரில் புரதம் கலப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.
விந்தணு
சில நேரங்களில் சிறுநீர் வடிகுழாயில் விந்து தங்கியிருந்தால் கூட சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம். விந்து சிறிதளவு சேர்ந்திருந்தாலும் கூட நுரை போன்று சிறுநீர் வரும்.
சிறுநீர் பை
விந்து வெளிப்படும் செயலின் போது விந்து சிறுநீர் பையில் நுழைந்துவிட்டாலும் கூட நுரை போன்று சிறுநீர் வெளிப்படலாம். பெண்கள் மத்தியில் வெள்ளை போக்கு உண்டாகும் போது சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம்.
சிறுநீரில் புரதம் அதிகரிக்க செய்யும் காரணிகள்… உணர்வு ரீதியான மன அழுத்தம் சில மருந்து / போதை மருந்துகள். கடுமையான உடற்பயிற்சி. காய்ச்சல். கடுமையான சளி / உடல் சூடு அதிகரிப்பு.
அச்சப்பட தேவையில்லை
நுரை போன்று சிறுநீர் வெளிப்படும் போது அச்சப்பட தேவையில்லை. இரத்தத்தில் இருக்கும் பொதுவான புரதம் ஆல்புமின். தொடர்ந்து நுரை போன்று சிறுநீர் வெளிவருவதை கண்டால், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
வேறு காரணிகள்…
பூச்சி, பாம்பு கடித்து விஷம் ஏறுதல். உணவில் அதிக இரசாயன கலப்பு. கல்லீரல் நோய், சேதம், செயலிழப்பு கர்ப்பம் இதயத்தின் ஆரோக்கிய நிலை குறைபாடு, வீக்கம், எரிச்சல், செயலிழப்பு. உயர் இரத்த அழுத்தம்.
சிறுநீர் பாதையில் தொற்று, சிருநீரில் புரத கலப்பு அதிகரிப்பதால் உண்டாகும் காய்ச்சல். சிறுநீரக செயலிழப்பு. முடக்கு வாதம்.
ஆண்களே எச்சரிக்கை! சிறுநீர் நுரை போன்று வெளிப்படுவது ஆபத்து!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.