Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 14, 2016

தமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக ஆக்க பிக்குகள் முயற்சி



புலி புலி என்று கூறி தமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக ஆக்கவேண்டும் என்பதற்காக மிக மோஷமான செயற்பாடுகளை பௌத்த பிக்குமார் சிலர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.
இதனால் தமிழர்கள் அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை நேற்று மாலை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பௌத்த பிக்கு இவ்வாறான தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து மட்டுமல்லாது, தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று கூறுவது, தமிழர்களை அழிப்பதற்கான முயற்சியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் பக்குவம் தமிழர்களிடத்தில் உண்டு எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் 98 வீதமானவர்கள் படித்தவர்கள் உள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே எமது மூலதனமான கல்வியைக் கற்று அறிவாளர்களாக, இந்த மண்ணில் மனிதர்களாக வாழ்வதகு வாழ்வாதாரத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.