Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

குழந்தைகளுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணாத மேஸ்திரி..! வெடி வைத்த அன்று..பிஞ்சுகள்.. அப்பா.. அப்பா.. என



நொடிபொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் பில்டிங். எற்கனவே அதே போல ஒரு பில்டிங் இடிந்து விழ நூற்றுக்கணக்கான அப்பாவி தொழிலாளிகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனார்கள்.

அவர்களில் ஒரு அன்பான மேஸ்திரி பழனியப்பன். மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். மூன்று  பெண் குழந்தைகள்.

மூன்றாவது பெண் குழந்தை பிறந்த இரண்டே வருடங்களில் மஞ்சள்காமாலை வந்து பழனி மனைவி குணவதி இறந்து போனார்.

உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் பழனி மறு கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை.குழந்தைகள் தான் முக்கியம் என்று அவர்களை பூப்போல வளர்த்தார்.

கடைசிப் பெண் பிள்ளையை கட்டிடம் கட்டும் இடங்களுக்கு தூக்கிப்போய் உணவு கொடுத்து தூங்க வைப்பார்.

அந்த அன்பு அப்பா, முதல் பில்டிங் இடிந்து சரிந்த போது சிக்கி உடல் நசுங்கி செத்துப் போனார். மூன்று குழந்தைகளும் நடுத்தெருவிற்கு வந்தனர்..!

உறவினர்கள் இப்போது காப்பாற்றி வருகின்றனர்..! அந்த கடைசிப் பொண்ணு கார்த்திகா அப்பா நினைவாகவே இன்னும் அழுது கொண்டே இருக்கிறார்.

இரண்டாவது பில்டிங் இடிக்கப்பட்ட அன்று அந்த பிஞ்சு அப்பா.. அப்பா.. என்று கதற..கூடி இருந்த அத்தனை பேரும் கதறி அழுதனர்..!

ஆனால் அந்த பில்டிங் முதலாளிகள்…?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.