November 21, 2016
பணத்தாள்கள் தட்டுப்பாடு: ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்
பணத் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500 ரூபாய், 1000 ரூபாய் பணத் தாள்கள் செல்லாது என்று அறிவித்ததுடன் அவற்றை வங்கிகளில் செலுத்துமாறு மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளுக்கு டீசல் வாங்க முடியாமலும் பிடித்த மீன்களை விற்க முடியாமலும் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்துக் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தால் தொழிலாளர்கள், மீன்வணிகர்கள் உள்ளிட்ட ஒருலட்சம் பேர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணத்தாள்கள் தட்டுப்பாடு: ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.