November 28, 2016
எங்கடா இருக்கு புதிய இந்தியா? ரஜினிக்கு ஆட்டோ ஓட்டுனர் கேள்வி
எங்கடா இருக்கு புதிய இந்தியா? ரஜினிக்கு ஆட்டோ ஓட்டுனர் கேள்வி
கடந்த 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறித்தார். வங்கிகளில் தினமும் அடையாள அட்டை கொடுத்து 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றி கொள்ளலாம் என்று தெரிவித்தார் அரசியல் வாதிகள் மிக பெரிய தொழில் அதிபர்கள் ரஜினி கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் எனை அனைவரும் இதனை ஆதரித்தும் பாராட்டியும் அறிக்கைகள் கொடுத்தனர். அனைத்து ஊடகங்களும் மோடியின் இந்த உத்தரவை பாராட்டி பக்கம் பக்கமா எழுதினர்.
ஆனால் சாதாரணமான மக்கள், குடும்ப செலவுக்கு கையில் சில ஐநூறு ருபாய் நோட்டுகளை வைத்து இருந்தவர்கள், நிலம் விற்ற பணத்தை கையில் வைத்திருந்தவர்கள், சிறுக சிறு சேமிப்புகளை கையில் வைத்திருந்தவர்கள், எல்லாம் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து தங்களிடம் இருக்கும் 500 ரூ 1000 ரூபாய் தாள்களுடன் வங்கிகளை நோக்கி படை எடுத்தனர். மக்கள் காலங்காலமாக உழைத்து சேர்த்த பணம் கருப்பு பணம் என்ற அறிவிக்கப்பட்ட அந்த ஒற்றை இரவில் 500 ரூபாய்க்கு 300 ரூபாய் 1000 ரூபாய்க்கு 700 ரூபாய் என்ற புதிய கருப்பு சந்தை ஒன்று உருவாகியது.
வங்கிகளில் அடையாள அட்டை கொண்டுவந்து 4000 ரூபாய் மாற்றி கொள்ளலாம் என்று பிரதமர் அறிவித்து இருந்த போதும் வங்கிகளின் பண தட்டுபாடுகாரணாமாக பல வங்கிகளில் 2000 ரூபாய்க்குதான் மாற்றி கொடுக்கப்பட்டது. பல இடங்களில் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் வழங்கபட்டன. இந்த இரண்டாயிரம் ரூபாய் தாள் சில்லரையில்லாமல் இன்று வரை எந்த பயனும் அற்றதாகவே இருக்கிறது.
பலர் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்தனர். எடிஎம்களில் மக்கள் அலை மோதினர். தமிழகத்தில் கிராம கூட்டுறவு வங்கிகள் முழுமையாக காலவரையற்று மூடப்பட்டன. மும்பையில் ஒரு மருத்துவமனையில் பழைய ரூபாய் நோட்டை வாங்காததால் சிகிச்சை அளிக்கமுடியாமல் ஒரு குழந்தை இதனால் இறந்து போனது. உத்திர பிரதேசத்தில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில் மோடியின் ஆதரவாளர்களால் தேசத்தை காக்க இதை கூட பொறுக்க முடியாதா என்ற பிரச்சராம் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போது பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் இதனை எதிர்த்து போராடங்களை துவக்கினர் எதிர்கட்சிகள் அனைத்தும் அரசின் முடிவிற்கு எதிராக போராட துவங்கியுள்ளன.
வங்கிக்கு பணம் மாற்றவரும் மக்களை எதிர் கொள்ள முடியாத அரசு பணம் மாற்றவருபவர்கள் மீண்டும் மீண்டும் வருவதால் தான் இந்த பிரச்சனை என்று மீண்டும் மக்களையே குற்றவாளியாக்கியது. இதனை தடுக்க பணம் மாற்று வருபவர்களுக்கு மை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.ஒட்டுமொத்த மக்களையும் மோடி அரசு குற்றப்பரம்பரையாக்கியது , பின்னரும் வங்கிகளிலோ அல்லது எடிஎம்களிலும் பணம் இல்லாமல் தான் மக்கள் அல்லாடினர் பணதட்டுப்பாடு காரணமாக இதுவரை 72 பேர் இறந்து இருப்பாதாக ஒரு தகவல் சொல்லுகிறது இது சாதரணமான தினசரி வருவாய் அடிப்படையில் பணி புரியிம் உழைக்கும் மக்களை எந்த விதமான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ள சென்னையில் பல்வேறு பகுதிகள் ஆட்டோ ஒட்டுனர், சாலை ஓர வியபாரிகளை சந்தித்தோம் அதில் ஆட்டோ ஒட்டுனரான பூங்காவனம் அவர்களின் கருத்தினை இங்கு பதிவு செய்துள்ளோம்.
இந்த நேர்காணாலில் அவர் 8 ஆம் தேதி இரவு அவரும் அவரை சுற்றி உள்ளவர்களும் என்ன பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள் என்று விரிவாக விளக்கியுள்ளார். மேலும் ரஜினி போன்றவர்கள் புதிய இந்தியா பிறந்து உள்ளதாக சொலியுள்ளார்கள் எங்கிருக்கிறது புதிய இந்தியா? இந்தியா பேங் வாசலில் காத்து கிடக்கு என்று மிக காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்கடா இருக்கு புதிய இந்தியா? ரஜினிக்கு ஆட்டோ ஓட்டுனர் கேள்வி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.