
பெரும்பாலான ஆண்கள் வெளியே சொல்ல முடியாத ஓர் பிரச்சனை தான் விரை விதை புற்றுநோய். கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள சுமார் 8,720 ஆண்களுக்கு விரை விதை புற்றுநோய் இருப்பது சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. அதுவும் 33 வயதுடைய ஆண்களுக்கு இப்பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு ஆணுக்கு விரை விதை புற்றுநோய் இருந்தால், குறிப்பிட்ட சில அறிகுறிகள் தென்படும். அதுவும் ஆண்களின் அந்தரங்க உறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். பல மருத்துவர்கள் 15 முதல் 40 வயதுடைய ஆண்கள் அடிக்கடி தங்களைத் தாங்களே சோதித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
ஆண்கள் தங்களது ஆண்குறியைப் பிடித்தவாறு, முதலில் ஒரு ஆண் விதையை சோதிக்க வேண்டும்.
அப்படி சோதிக்கையில் ஆண் விதையில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் அல்லது ஆண் விதையின் வடிவம், அளவில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
விதைப்பை பாரமாக இருப்பது போன்று இருந்தால், அது விரை விதையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
ஆண்களின் அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலி அல்லது ஏதேனும் அழுத்தம் கொடுப்பது போல் உணர்ந்தால், அதுவும் விரை விதையில் பிரச்சனையை இருப்பதை உணர்த்தும்.
சிறுவர்களுக்கு விரை விதை புற்றுநோய் இருந்தால், அந்த சிறுவர்கள் சிறு வயதிலேயே பருவ வயதை அடைந்துவிடுவார்கள். அதுவும் உடலில் ஆண் செக்ஸ் ஹார்மோனான ஆன்ட்ரோஜென்கள் கட்டிகளாகி, ஆண்களின் உடலில் ரோமத்தின் வளர்ச்சி அதிகரிக்கும், முகத்தில் மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிக்கும் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படும்.விரை விதை பாதிக்கப்பட்டிருந்தால், மார்பக வளர்ச்சி அல்லது மார்பக பகுதியில் புண் போன்றவை ஏற்படும். ஏனெனில் குறிப்பிட்ட செல் கட்டிகளானது ஈஸ்ட்ரோஜெனை உற்பத்தி செய்து, மார்பகங்களை பெரிதாக்கும் மற்றும் பாலுணர்ச்சி குறைவாக இருக்கும்.விதைப்பையில் வலி இருந்தோ, இல்லாமலோ இருந்து, அங்கு வீக்கம் அல்லது கட்டிகள் இருந்தால், அதுவும் விரை விதை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.