Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

புஷ்பாவை அடக்க பிரதமருக்கு தூது விட்ட சசிகலா நடராஜன்! மோடி சொன்னது என்ன?



சசிகலா புஷ்பாவை அடக்கி வைக்க பிரதமர் உதவியை சசிகலா நடராஜன் நாடிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா அப்பல்லோவுக்கு சென்றதையடுத்து கடந்த 2 மாதங்களாக கட்சி மற்றும் ஆட்சியை மறைமுகமாக இயக்கி வருகிறார் அவரின் உடன் பிறவாச் சகோதரி. இவரின் அதிகார பரவலுக்கு எதிரான அரசியல் , கட்சியிலும் ஆட்சியிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிரொலிக்கவே செய்தன.
அதில், வெளிப்படையாக சசிகலாவை அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பாவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் எதிர்த்தனர். இதனால் அப்செட் ஆனாராம் சசிகலா.
இந்த நிலையில் தனது எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த திட்டமிட்ட சசிகலா, கடந்த வாரம் தீபாவை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். அடுத்து, சசிகலா புஷ்பா சமீபத்தில் கூட சசிகலாவுக்கு எதிராக வீடியோவில் பேசி வெளியிட்டதில் மேலும் அப்செட்டானவர், புஷ்பாவின் பின்னணியில் மத்திய அரசு தான் இருக்கிறது என்பதையறிந்து பிரதமரை சந்திக்க தம்பிதுரையை அனுப்பி வைத்தார்.
தமிழக மீனவர் பிரச்சனை குறித்து மனு அளிப்பதற்காக தேதி குறித்தார்கள் அதிமுக சீனியர்கள். அந்த சந்திப்பில் புஷ்பாவை அமைதியாக இருக்க வைக்க கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதற்கு பிரதமர் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. “ஆகட்டும் பார்க்கலாம்..” என்கிற அளவில் சொல்லியனுப்பிவிட்டார் என்கின்றனர் அதிமுகவின் சீனியர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.