Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

‘‘அது அப்போ, இது இப்போ''- வடிவேலுவும் கறுப்புப் பணமும்!


ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவது ஏழைகளைப் பாதிக்கும் என்று இப்போது சொல்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014 ஜனவரியில் 2005-ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களைத் திரும்ப ப் பெறுவதாக அறிவித்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது இதே பி.ஜே.பி கட்சிதான்.

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. அது வேறவாய் இது நாற வாய், அது அப்போ, இது இப்போ என சாதாரண மக்களின் கலைஞன் வடிவேலுவின் காமெடி வசனங்கள் இந்த அரசியல் முரண்களில் அழகாய் பொருந்துகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்காது.

2014-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக க் கூறி 2005-ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது இது குறித்து பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெக்கி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை நாட்டுக்குத் திரும்பிக் கொண்டு வருவது குறித்த விவகாரத்தில் அரசின் அறிவிப்பு ஒரு ஜிம்மிக் வேலை மட்டுமின்றி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த நடவடிக்கை நிச்சயமாக ஏழைகளுக்கு எதிரானது. படிப்பறிவு இல்லாத, வங்கிக் கணக்கு வசதி இல்லாத அப்பாவிகளை திசை திருப்பும் செயல். வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களும், கணக்கே இல்லாதவர்களையும் குறிவைத்து அரசாங்கம் இந்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப் பணப் புழக்கத்தை முற்றிலும் ஒழித்து விடாது என்று கூறி இருக்கிறார்.

ப‌ணக்காரர்களுக்கான கொள்கை

இந்த நாட்டில் உள்ள 65 சதவிகித மக்கள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள். அவர்கள் குக்கிராமங்களில் வாழும்படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் தங்களின் வாழ்வாரத்துக்கான உழைப்பில் கிடைத்த பணத்தை தங்கள் வீட்டிலேயே சேமித்து வைத்திருக்கின்றனர். அரசின் அறிவிப்பால் இப்போது, கமிஷன் ஏஜென்ட்கள் பலர் அவர்களை அணுகி, உங்கள் பணம் மதிப்பில்லாமல் போய்விடும் என்று அவர்களை அச்சுறுத்தி, பணத்தை மாற்றித் தருவதாக க் கூறி கமிஷன் வாங்கி அவர்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கின்றனர். நாட்டில் கறுப்புப் பணம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்றும் அது அப்படியே புதிய ரூபாய் நோட்டாக மாறி விடும் என்றும் நுண்ணறியாத நிலையில் அரசு இருக்கிறது.



சிதம்பரத்தின் கொள்கையானது சாதாரண வேர்வை சிந்த, ரத்தம் சிந்த உழைக்கும் மக்களுக்கானது அல்ல. பணக்காரர்களுக்கானது.  அவரின் கொள்கை சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை ஒன்றும் செய்யாது. இந்தியாவில் எந்த ஒரு வங்கிக் கணக்கும் இல்லாதவர்களைத்தான் பாதிக்கும். அமெரிக்க டாலராகவோ அல்லது வேறு நாட்டின் கரன்சியாகவோ கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களை இது பாதிக்காது. இந்திய ரூபாயாக வைத்திருப்பவர்களைத்தான் இது பாதிக்கும் என்று அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி வறுத்தெடுத்து இருக்கிறது.

பி.ஜே.பி-க்கும் பொருந்தும் வார்த்தைகள்...

இதை வரிகளை இப்போது காங்கிரஸ் தலைவரின் பெயரைப் போட்டு அவர் சொன்னதாகச் சொன்னாலும் பொருத்தமாக இருக்கிறது.   ஆனால், அப்போதைய நிலையை விட இப்போது ஏராளமானவர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கி இருக்கின்றனர். 2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட நோட்டுக்களை மட்டுமே மன்மோகன் அரசு திரும்ப ப்பெற்றது. அதற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. சில முறை அந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. தேர்தல் வந்ததால் அது கைவிடப்பட்டது. அமலுக்கு வராத திட்டத்தையை எதிர்த்த பி.ஜே.பி இப்போது முன்னறிவுப்பு இன்றி திடீரென ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றிருக்கிறது பி.ஜே.பி அரசு. இப்போது உண்மையில் ஏழைகளை பாதிக்கும் திட்டத்தை அறிவித்தது மோடி அரசுதான். ஆம் ஆத்மிக்கான அரசு என்று மார்தட்டிக் கொள்வதில் அர்த்த‍மே இல்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.