Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 21, 2016

பார்பி பாவாடை நிறமும் நமது 2000 ருபாய் நோட்டும்


புதிய 2000 ரூபாய் நோட்டு பார்பி பொம்மையின் பாவாடை போல இருக்கிறது என்று கிண்டல் அடித்து பதிவு போட்டிருந்தார் ஒருவர் . மேலோட்டமாக பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும், நிறைய யோசிக்க வைத்தது. இதற்குப் பின்னால் `Pink for girls Blue for boys' உளவியல் நம்மை இயக்குகிறதோ, நாம் அறியாமலே...

பெண் ஆண் குழந்தைகளுக்கான பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்காக, குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் முன்வைக்கப்பட்ட `Pink for girls Blue for boys' கோஷம், 80களில், சந்தையில் உறுதியாக நிறுவப்பட்டதாக சொல்கிறார் வரலாற்றாசிரியர் Jo Paoletti. பிங்க் கலர் பெண்மைத்தன்மையையும், ப்ளூ கலர் ஆண்தன்மையையும் பிரதிபலிப்பதாக `கார்ப்பரேட் சந்தைக்கார்கள்' ஒரு `வெளக்கத்தை' எழுதினார்களாம்.

அதிலிருந்து ஏஞ்சல், பார்பி பொம்மை போல பெண் குழந்தைகளுக்கான `நளினமான' விளையாட்டு சாமான்கள், வேலைப்பாடான கவுன்கள் பிங்க் நிறத்திலும், பைக், கார்கள் மாதிரியான ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், ஜீன்ஸ் பேண்ட், சட்டைகள் ப்ளூ நிறத்திலும் பெருவாரியாக வர ஆரம்பித்தன.

.இன்னைக்கும்...பிங்க்கும், ப்ளூவும் இருபாலரும் பயன்படுத்துகிற நவீன தலைமுறை சிறகடிக்கும் இன்னைக்கும்... இதில் பெரிய மாற்றமில்லை. கலரில் ஆரம்பித்து, விளையாட்டுப் பொருட்களின் தன்மை வரை அனைத்தும் பொம்பளப் பொண்ண `அழகு தேவதையாகவும்', ஆம்பளப் பய்யனை `உய்விக்க வந்த சூப்பர்மேனாகவும்' கருதுகின்றன. இதில் ஆரம்பிக்கிறது stereotyping of gender roles எனும் பாலினப் பேதம். இது பொது உளவியலிலும் ஆழப் பதிந்திருக்கிறது.

பெண்ணுக்காக வரையறுக்கப்பட்ட எதுவும் பிங்க்காக இருக்கும்பட்சத்தில் நமக்கு பிரச்சனையில்லை. `ச்ச்சோ ஸ்வீட்ட்'! ஆனால், ஆணுக்கானது என்பதில் பிங்க் இருந்தால் போச்சு ! அது மோசமாக கிண்டலடிக்கப்படும், பகடி செய்யப்படும். ராமராஜனின் `பஞ்சு மிட்டாய் சட்ட'யாகட்டும் ரூபாய் நோட்டாகட்டும்.

stereotyping of gender role-ன் மிக மோசமான வடிவம் பர்பி பொம்மை, அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பெண்ணுக்கான கலராக பொதுசமுதாயம் நினைக்கும் நிறத்தில் (அதில் நமக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம்) ரூபாய் நோட்டு இருக்கக் கூடாதா?

ரூபாய் நோட்டு பார்பி பொம்மையின் பாவாடைக் கலரில் இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை நண்பா ?

அதுசரி, ரூபாய் நோட்டு ஆணா பெண்ணா ? :) :)

(பிகு : இது அரசியல் பதிவுமல்ல, பெண்ணாதிக்க பதிவுமல்ல :P )

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.