கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள் ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டது. ஆனால், கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்ட பணம், இப்போது சப்தமில்லாமல் கைமாறி வருவது அதிர்ச்சிக்குரிய தகவல்.
நாடு முழுவதும் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் பதுக்கி வைத்திருந்த கும்பல், அதை ரகசியமாக மாற்றி வருகின்றனர். இதற்கென தனி நெட்வோர்க் செயல்படுகிறது. கோடிக்கணக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் ரகசிய குடோன்களில் பதுக்கி வைத்திருந்த பண முதலைகள் அதை மாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கிகளில் டெபாசிட் செய்தால் 200 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்ததால் அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இதனால் குறுக்கு வழியில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவர்கள் முயன்று வருகின்றனர்.
இதுகுறித்து உள்விவரம் தெரிந்த வட்டாரங்கள் கூறுகையில், ஹவாலா பணத்தில் கொடிக்கட்டிப் பறக்கும் கும்பல்கள், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் காட்டில் இப்போது அதிர்ஷ்ட மழை பொழிகிறது. இந்த கும்பலிடம் 40 சதவிகிதம் கமிஷனுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகின்றன. மீதி உள்ள 60 சதவீத கறுப்புப்பணம் நல்ல நோட்டுகளாக மாற்றப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்திடம் 200 கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளின் கட்டுக்கள் இருந்துள்ளன. அந்த கறுப்புப் பணத்தை மாற்ற இந்த கும்பலிடம் சில புரோக்கர்கள் மூலம் நிறுவனம் தூது விட்டது. உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு காரில் 200 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஏற்கெனவே பேரம் பேசியபடி 60 சதவிகித பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். ஒரு மணி நேரத்தில் இந்த பண பரிமாற்றம் நடந்து முடிந்துள்ளது.
இப்போது 100, 50, 20, 10 ரூபாய் கட்டுக்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், பழைய ரூபாய் நோட்டுகளுக்கான காலக்கெடு முடியும் கடைசி நேரத்தில் கமிஷன் சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி விட்டது. எப்படியாவது 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி விட பதுக்கி வைத்தவர்கள் முயற்சித்து வருகின்றனர். சில வங்கிகளிலும் கறுப்புப் பணம் சப்தமில்லாமல் ரகசியமாக மாற்றிக் கொடுக்கின்றன. அவர்களுக்குரிய கமிஷன் தொகை 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக கொடுக்கப்படுகின்றன" என்றனர்.
ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில், கமிஷனை பெற்றுக் கொண்டு கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுப்பது சட்டத்துக்கு விரோதமானது. மக்களின் பணத்தேவையை சந்திக்க பல்வேறு வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும்போது முறைகேடாக ஒரே நபர், 100, 50, 20,10 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவே பணத்தை மாற்ற வருபவர்களுக்கு வலது கை விரலில் மை வைப்பது போன்ற விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்பிறகு கறுப்புப் பணம் அனைத்தும் கணக்கில் வந்துவிடும். கமிஷனைப் பெற்றுக் கொண்டு பணம் மாற்றப்படுவதும் தடுக்கப்படும்" என்றனர்.
வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், வருமான வரி உச்சவரம்புக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யப்படும் வங்கி கணக்குகளை கண்டறிந்து அவர்களிடம் வருமானத்துக்கான வழியை கேட்போம். அதற்கு சரியான கணக்கு காட்டவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கறுப்புப் பணம் மொத்தமாக மாற்றப்படுவது குறித்த தகவலை எங்களுக்கு தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்" என்றனர்.
டிசம்பர் 30-ம் தேதிக்குப்பிறகு இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதங்களாக மாறப் போகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கும், ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க கறுப்புப் பணத்தை கணக்கில் காட்டுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.