மன்மோகன் சிங் நேத்து பாராளுமன்றத்துல பேசினது ஆரம்பிச்சு அப்போலோல ஜெயலலிதாவோட உடல்நிலை வரைக்கும் வர்ற செய்திகள் எல்லாம் உங்களுக்கு எங்க தெரியுது? இந்த கேள்விக்கு பாதி பேரோட பதில் ஃபேஸ்புக். ஆனா அதுல வர்ற செய்திகள்ல பொய்யான செய்திகள், வதந்திகள் இருக்குனு ஃபேஸ்புக்கே ஒத்துகிட்டு இருக்கு. அப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான செய்திகளை நாம எங்க தான் தெரிந்து கொள்வதுனு கேட்டா இந்த 4 வழிகள்ல நம்பகத்தன்மையான செய்திகளைப் பெறலாம்.
1. செய்திகள் என்பது தனிநபர் மூலமாகவோ அல்லது செய்தி தளங்கள் மூலமாகவோ வேகமாக பரவி வருகிறது. செய்திகளை ஒருங்கிணைத்து தரும் இணையதளங்கள் பெருகி வருகின்றன. அவற்றில் சில படிப்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பகத்தன்மையுடன் செய்திகளை ஒருங்கிணைத்து நம் பார்வைக்கு தருகிறது. உதாரணமாக ஒருவர் அரசியல் மற்றும் விளையாட்டு செய்திகளை மட்டும் படிக்கிறார் என்றால் அவருக்கு அந்த துறையில் நிகழும் செய்திகளை மட்டும் தரும் அதன் அப்டேட் என்பதும் வேகமாக இருக்கும். ஃபீட்லி, ஃப்ளிப் போர்ட் போன்ற தளங்கள் எளிமையாக செய்திகளை தொகுத்து வழங்குகின்றன.
2. நம்பகமான செய்தி தளங்களின் நியூஸ்லெட்டர்கள். ஒரு நாளின், ஒரு வாரத்தின் முக்கிய செய்திகளை தவறவிட்ட செய்திகளை தொகுத்து மிகவும் பர்சனலாக நமது மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி நிறுவனங்களும், செய்தியை தொகுத்து தரும் அக்ரிகேட்டர் சேவை நிறுவனங்களும் நமக்கு நியூஸ்லெட்டர்களாக அனுப்பி வைக்கின்றன.
அதற்கு அந்த நிறுவனங்கள் உங்களிடம் இருந்து உங்கள் விருப்பத்துடன் மின்னஞ்சல் முகவரியை பெற்று அதற்கு செய்திகளை தவறாமல் அனுப்புகின்றன. இது குறிப்பிட்ட பிரிவு வாரியாகவும் அனுப்பப்படுகிறது.
3. ஆப்ஸ்கள், இன்றைய டிஜிட்டல் உலகில் கையடக்க செல்போனுக்குள் உலகமே சுருங்கிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகளும் செய்திகளாக பரவும் அபாயம் உள்ளதால் நம்பகத்தகுந்த செய்தி ஆப்ஸ்களையும். பயன்பாட்டாளர்களால் அதிக ரேட்டிங் பெறப்பட்ட செய்தி ஆப்ஸ்களையும் பயன்படுத்துங்கள். சில ஆப்ஸ்கள் உடனடி செய்திக்கான ஆப்ஸ்களாகவும், எளிதில் ஷேர் செய்யக்கூடிய வசதியுடன் உள்ள ஆப்ஸ்களாகவும் இருக்கும்,அவற்றை இன்ஸ்டால் செய்து முக்கிய செய்திகளை தவறவிடாமல் இருங்கள். இவற்றில் அளிக்கப்பட்டுள்ள புஷ் நோட்டிஃபிகேஷன்கள் மூலம் உங்களுக்கு தேவைப்படும் பிரிவில் அளிக்கப்படும் செய்திகளை நோட்டிஃபிகேஷன்களாகவும் பெற முடியும். இதனை மேம்படுத்த செய்தி ஆப்ஸ் நிறுவனங்கள் பல முயற்சிகளை எடுத்துவருகின்றன.
4. மேம்படுத்தப்பட்ட செய்திகளை தரும் இணையதளங்களை முகப்பு பக்கத்தில் லோகோவாக சேமித்து வைய்யுங்கள். உதாரணமாக உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் ஒரு செய்தியை படிக்கிறீர்கள். அந்த தளம் உங்களுக்கு பிடித்துள்ளது என்றால் உங்கள் ப்ரெளசரில் ''Add to Homescreen'' ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்கள் முகப்பு பக்கத்தில் அந்த இணையதளத்தின் லோகோவை சேர்த்துவிடும். இதனால் உங்கள் போனில் ஆப்ஸை இன்ஸ்டால் செய்து மெமரியை இழப்பதையும் தடுக்கலாம்.
ஃபேஸ்புக் மட்டுமே செய்திகளை எப்போதும் தரும் என்று எதிர்பார்த்தால் அதில் போலிகள் செய்திகளை வழங்கவும் வாய்ப்புள்ளது. அதற்கு உதாரணம் தான் சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான வதந்திகள். மேலுள்ள விஷயங்களை கடைபிடித்தால் உண்மையான செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.