ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்து வரும், ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடிய ஆடம் வோஜ்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அடிலெய்டில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கும் வகையில், உள்ளூர் போட்டியில் அவர் முத்திரை பதிக்கும் முனைப்பில் இருந்தார்.
முதல்நாள் ஆட்டம் இன்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக, டாஸ்மேனியா வேகப்பந்து வீச்சாளர் கேம்ரூன் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர், ஆடம் வோஜ்ஸ் ஹெல்மட்டை பதம் பார்த்தது. நிலைகுலைந்த வோஜ்ஸ் அப்படியே மண்டியிட்டு, கீழே விழுந்தார். உடனடியாக களத்தில் அவருக்கு இரு அணிகளின் டாக்டர்களும் சிகிச்சை அளித்தனர்.
இந்த தகவலை, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி அளவில் உறுதிப்படுத்தியுள்ளது. ‛வோஜ்ஸ் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால் ஆரம்பத்தில் அவருக்கு தலைசுற்றல் இருந்தது. இப்போது அவர் நார்மலாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர். இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார்’ என, அந்த கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இரண்டாவது முறையாக வோஜ்ஸ் பலத்த காயம் அடைந்துள்ளார். கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரின்போது மிடில்செக்ஸ் அணிக்காக ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஸ்லிப் திசையில் நின்றிருந்தார். தேர்ட்மேன் ஏரியாவில் இருந்து சக வீரர் த்ரோ செய்த பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்க முயன்றபோது, விக்கெட் கீப்பரும், வோஜ்ஸும் மோதிக் கொண்டனர். இதில் வோஜ்ஸ் நிலைகுலைந்தார். பின், டாக்டர்கள் அவரை கைதாங்கலாக அழைத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.