சார்லெட் ஹாக்டன், வழக்கம் போலவே அன்றும் தன்னுடைய 3 வயது மகன் மேசனை அழைத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறார். சார்லெட், சமையலுக்கு தேவையான காய்கறிகளை தேடிக்கொண்டிருக்க, அவரது மகன் ‘கின்டர் ஜாய்’ சாக்லெட்டுகளை தேடியிருக்கிறான். அம்மா–மகன் இருவருமே ஒருவழியாக ஷாப்பிங்கை முடித்துவிட, பில் கவுண்டருக்கு நகர்ந்திருக்கிறார்கள். அங்கு தான் இந்த நகைச்சுவை சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
டிராலியில் இருந்த காய்கறிகளை பில் போட்டு முடித்த சார்லெட், மகன் மேசனின் கையில் இருந்த கின்டர் ஜாயையும் வாங்கி பில் போட கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான் சூப்பர் மார்க்கெட்டில் அடிதடி சண்டையே மூண்டுவிட்டது.
‘மிட்டாயை வாங்கியதற்காக சிறுவன் அழுது, ஆர்ப்பாட்டம் செய்கிறான் போல’ என்று நினைத்து அங்கு நெருங்கியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு மாறி மாறி கன்னத்தில் அறைந்தபடி, சண்டையிட்டு உருண்டுக்கொண்டிருந்தது சார்லெட்டும், ‘பில்’ போடும் பெண்மணியும்.
அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டு, ‘என்னங்க ஆச்சு..’ என்று கேட்க, ‘பில்’ போடும் பெண்மணி ஆதங்கத்தில் அழுதே விட்டார். ‘பெண்கள் சாப்பிடும் இளஞ்சிவப்பு நிற கின்டர் ஜாய் உனக்கு எதற்கு? என்று சிறுவனிடம் வேடிக்கையாகத்தாங்க கேட்டேன். உடனே சிறுவனின் அம்மா கோதாவில் இறங்கிவிட்டார்’ என்று கதறியிருக்கிறார்.
ஆனால் சார்லெட்டோ, ‘அது எப்படி நீங்க கேட்கலாம். பெண்கள் சாப்பிடுவதாக இருந்தால் என்ன? ஆண்கள் சாப்பிடுவதாக இருந்தால் என்ன? பணம் கொடுத்து தானே வாங்குகிறோம்’ என்று மீண்டும் மல்யுத்தம் தொடங்கிவிட்டது. தகவல் தெரிந்து அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்து சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.