சென்னை,
டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிலையங்களில் பணம் பெறும் திட்டத்தை செயல்படுத்த பெட்ரோல் டீலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டம் அடுத்த வாரம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
பெட்ரோல் நிலையங்களில் பண வினியோகம்
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து, புதிய நோட்டுகளை பெற வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் அங்கெல்லாம் நீண்ட வரிசை காணப்படுகிறது. மக்களின் சிரமத்தை குறைக்கும்வகையில், நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் பணம் வினியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
50 பேர் பெறலாம்
இதன்படி, பாரத ஸ்டேட் வங்கியின் ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்’ கருவியை வைத்திருக்கும் குறிப்பிட்ட 2,500 பெட்ரோல் நிலையங்களில் இத்திட்டம் நேற்று அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அக்கருவியில் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பதால், நாள்தோறும் 50 பேருக்கு மட்டுமே இப்படி பணம் வழங்க முடியும்.
இதுபோல், எச்.டி.எப்.சி., சிட்டிபேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரிகளுடன் பெட்ரோலிய அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் மேற்கண்ட வங்கிகளின் பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி வைத்துள்ள 20 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களிலும் பணம் பெறும் வசதி, இன்னும் 3 நாள்களில் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
எதிர்ப்பு
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு பெட்ரோல் டீலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயலாளர் அகீல் அப்பாஸ் கூறியதாவது:-
பணம் வினியோகிக்க நாங்கள் வங்கிகள் அல்ல. பெட்ரோல் வினியோகிப்பது மட்டுமே எங்கள் வேலை. அரசு உத்தரவுப்படி, பழைய ரூபாய் நோட்டுகளை நாங்கள் வாங்கி வருகிறோம். அத்துடன், பணம் வழங்குவதையும் செய்வது கடினம். அதை கட்டாயமாக செயல்படுத்த அரசு விரும்பினால், பெட்ரோல் நிலையங்களில் அதற்கென இடம் ஒதுக்கி தருகிறோம். வங்கி அதிகாரிகளே வந்து பணம் வழங்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 686 பெட்ரோல் நிலையங்களில், டெபிட் கார்டு மூலம் பணம் வழங்கும் வசதி அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு
ஆனால், சென்னை உள்பட தமிழகத்தின் எப்பகுதியிலும் நேற்று இந்த திட்டம் அமலுக்கு வரவில்லை. பத்திரிகைகளில் செய்தியை பார்த்து விட்டு, காலையில் டெபிட் கார்டுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர். எந்த பெட்ரோல் நிலையத்திலும் பணம் வழங்கப்படாததால், மீண்டும் ஏ.டி.எம்.களுக்கே சென்றனர்.
தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி கூறியதாவது:-
பெட்ரோல் நிலையங்களில் ‘டெபிட்’ மற்றும் ‘கிரெடிட்’ கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பணம் எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களில் இருந்து, வெறும் 2 ஆயிரத்து 500 விற்பனை நிலையங்களே இதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த வாரம் அமல்
இந்த 2 ஆயிரத்து 500 மையங்களும் கிராமப்புற பகுதிகள், ஏ.டி.எம். மையங்கள் இல்லாத இடங்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்த விற்பனை நிலையங்களில் எஸ்.பி.ஐ. வங்கி ‘டெபிட்’ மற்றும் ‘கிரெடிட்’ கார்டுகள் மட்டுமே ஏற்கப்படும். இந்த 2 ஆயிரத்து 500 விற்பனை நிலையங்களில் தமிழகத்துக்கு எத்தனை மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன? அவை எவை? என்பது தொடர்பான முழு விவரமும் விரைவில் வெளியாகும். இந்த திட்டம் அடுத்த வாரம் தொடக்கத்தில் அமலாகலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.