மெக்சிகோ மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பயணித்த ஏரோ மெக்சிகோ 230 என்ற விமானம் பறந்து கொண்டு இருந்தது.விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த் விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி பாம்பு ஒன்று சறுக்கி கீழே விழுகிறது.பாம்பை கண்டவுன் பயணிகள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி மற்ற பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாம்பு பயணிகளிடையே புகுந்தவுடன் அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக, விமான குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை முன்னதாகவே மெக்சிக்கோவில் தரையிறக்கும் படி விமானியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, விலங்கு கட்டுப்பாடு அதிகாரிகள் விமானத்தில் வந்து பாம்பை பிடித்துச் சென்றுள்ளனர். எனினும், பாம்பு கொடிய வகை பாம்பா என அறியப்படவில்லை. சம்பவம் குறித்து மெக்சிகோ விமான நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
November 8, 2016
வீடியோ: நடுவானில் பறந்த விமானத்தில் பாம்பு பயணிகள் அலறல்
Reviewed by Anitha
on
November 08, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.