பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவ் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.
கியூரியாசிட்டி விண்கலம் இதுவரை 13.5 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்துள்ளது. சுமார் 128,000 புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
கியூரியோசிட்டி ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தினை சல்லடை போட்டு ஆராய்ச்சி செய்து வருகின்றது.
இந் நிலையில் தற்போது விசித்திரமான புனல் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் விட்டம் கொண்ட இவ் வடிவமானது பல வர்ணங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அப் பகுதியில் நீர், வெப்பம் மற்றும் விட்டமின்கள் ஒன்றிணைந்து காணப்படுவதனாலேயே அப் பகுதி பல வர்ணங்களில் தென்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து பகுதியில் எரிமலைக்குழம்புகள் பனிக்கட்டிகளுடன் இணைந்ததனால் இவ்வாறானதொரு தோற்றம் உண்டாகியிருந்ததாகவும், இதேபோன்ற செயற்பாடு செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இவ் வடிவம் விஞ்ஞானிகளால் ஹெல்லாஸ் பிளாண்டியா எனப் பெயரிடப்பட்டிருக்கும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.