பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கியது.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் நடந்த ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய 25 வயதான பிலிப் ஹியூக்ஸ், நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய எகிறி (பவுன்சர்) வந்த பந்தை அடித்து ஆட முயன்ற போது, அது அவரது கழுத்தின் இடது பகுதியில் பயங்கரமாக தாக்கியது.
இதனால் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்த ஹியூக்ஸ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தாலும் மயக்க நிலையிலேயே நவம்பர் 27-ந் தேதி அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திரமாக விளங்கிய பிலிப் ஹியூக்சின் மரணத்துக்கான காரணம் குறித்த விசாரணையில் பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. அவரது மிகச் சிறிய தவறான கணிப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையில் சில பரிந்துரைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
‘எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பார்த்து கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறோம்’ என்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
இதற்கிடையே பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடி நிவாரண உதவி தொகையாக வழங்கியது. விசாரணை அதிகாரி தனது அறிக்கையை ஹியூக்ஸ் மரணம் விபத்து என்றாலும் அவரது குடும்பத்துக்கு கூடுதலான உதவி தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவ்வளவு உதவி தொகையை வழங்கியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.