தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பியதால், செங்கல்பட்டில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை திரும்பினர்
சென்னையில் வசித்து வருபவர்களில் லட்சக்கணக்கான பேர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்படி சென்றவர்களில் ஏராளமான பேர், தீபாவளி முடிந்து நேற்று அதிகாலை முதல் சென்னை திரும்ப தொடங்கினர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை சுமார் 23 ஆயிரம் கார்கள் செங்கல்பட்டு சுங்க சாவடியை கடந்து வந்தன.
செங்கல்பட்டு சுங்க சாவடியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதால் வாகனங்கள் நின்ற இடத்திலேயே சுங்க சாவடி ஊழியர்கள் ரசீது கொடுத்து சுங்க கட்டணத்தை வசூல் செய்தனர். சொந்த ஊர்களுக்கு காரில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று அதிகாலை 3 மணி முதல் சென்னை திரும்பினர்.
போக்குவரத்து நெரிசல்
தென் மாவட்டங்களில் இருந்தும் கோவை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் ஏராளமான பயணிகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் சென்னைக்கு வர தொடங்கினர்.
செங்கல்பட்டு சுங்க சாவடியில் இருந்து பெருங்களத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக வரும் நேரத்தை விட சுமார் 3 மணி நேரம் தாமதமாக பஸ்கள் பெருங்களத்தூர் வந்தன.
கூட்டம் அலைமோதியது
லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோல் அனைத்து ஆம்னி மற்றும் அரசு பஸ்கள் தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக கோயம்பேட்டிற்கு திருப்பி விடப்பட்டன. எனவே தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. அங்கிருந்து பயணிகள் மாநகர பஸ், ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளில் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். அப்படி சென்றவர்களில் பலர், ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
போலீசார்
ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வண்டலூரில் இருந்து தாம்பரம் பைபாஸ் சாலை வரை போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.