Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

தங்கம் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவிக்க 600-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளுக்கு உத்தரவு


நாடு முழுவதும் 25 நகரங்களில் தங்கம் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவிக்க 600-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி செவ்வாய் இரவு திடீரென அறிவித்தார். அதேசமயம், இந்த நோட்டுகள் தான் செல்லுபடி ஆகாதே தவிர, இவற்றின் மதிப்பு குறையவில்லை என்று கூறிய அவர், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டிசம்பர் 30–ந் தேதி வரை பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, பெருநகரங்களின் ஏ.டி.எம்.களில் 100 ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக பொதுமக்கள் திரண்டனர்.
இதற்கிடையே சில வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள், பண பறிமாற்றம் செய்பவர்கள், ஹவாலா மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை முறைகேடான வழியில் தள்ளுபடி விலையில் மற்றவர்களிடம் கொடுத்து அவற்றுக்கு பதிலாக வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதாவது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மற்றவர்களிடம் விலைபேசி விற்று, அப்படி கொடுத்த தொகைக்கு மிகக்குறைவான தொகையை அவர்களிடம் இருந்த பெற்றுக்கொள்வதாக தகவல் கிடைத்தது. இதன்மூலம், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவதில் அவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு எதுவும் இல்லாமல் போய்விடும்.

இதையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் தென் இந்தியாவின் இரு நகரங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டெல்லியில் தரிபா கலான், சாந்தினி சவுக் உள்பட முக்கியமான 4 இடங்களில் உள்ள நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். வருமான வரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக நகைக்கடை வியாபாரிகள் இன்று கடைகளை திறக்கவில்லை. இன்றும் முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னையிலும் நகைக்கடைகளில் சோதனை நடந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் தங்கம் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவிக்க 600-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 25 நகரங்களில் உள்ள 600-க்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகள், தங்க விற்பனை தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று டிஜிசிஇஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிஉள்ளனர். மத்திய உற்பத்தி வரி புலனாய்வு இயக்குநரகம் (டிஜிசிஇஐ) 7 தேதி முதல் 4 நாட்களில் ஆன விற்பனை தொடர்பாக தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு உள்ளது. அவர்களிடம் இருந்த இருப்பு எவ்வளவு, விற்பனை எவ்வளவு என்றும் தகவல்களை கேட்டு உள்ளது.

முக்கியமான நகைக்கடைகள் மற்றும் அவர்களிடன் தங்க நகை தயாரிப்பு கூடங்களுக்கு சென்ற டிஜிசிஇஐ அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கிஉள்ளனர் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.