Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

2017–ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அறிவிப்பு


2017–ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் பா.ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஜனவரி 1 – ஆங்கிலப்புத்தாண்டு (ஞாயிற்றுக்கிழமை)

ஜனவரி 14 – பொங்கல் தினம் (சனிக்கிழமை)

ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம் (ஞாயிற்றுக்கிழமை)

ஜனவரி 16 – உழவர் திருநாள் (திங்கட்கிழமை)

ஜனவரி 26 – குடியரசு தினம் (வியாழக்கிழமை)

மார்ச் 29 – தெலுங்கு வருடப்பிறப்பு (புதன்கிழமை)

ஏப்ரல் 1 – வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள், சனிக்கிழமை)

ஏப்ரல் 9 – மகாவீர் ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)

ஏப்ரல் 14 – தமிழ்ப் புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்த நாள்–புனிதவெள்ளி (வெள்ளிக்கிழமை)

மே 1 – மே தினம் (திங்கட்கிழமை)

ஜூன் 26 – ரம்ஜான் (திங்கட்கிழமை)

ஆகஸ்டு 14 – கிருஷ்ண ஜெயந்தி (திங்கட்கிழமை)

ஆகஸ்டு 15 – சுதந்திர தினம் (செவ்வாய்க்கிழமை)

ஆகஸ்டு 25 – விநாயகர் சதுர்த்தி (வெள்ளிக்கிழமை)

செப்டம்பர் 2 – பக்ரீத் பண்டிகை (சனிக்கிழமை)

செப்டம்பர் 29 – ஆயுத பூஜை (வெள்ளிக்கிழமை)

செப்டம்பர் 30 – விஜயதசமி (சனிக்கிழமை)

அக்டோபர் 1 – மொகரம் – (ஞாயிற்றுக்கிழமை)

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி (திங்கட்கிழமை)

அக்டோபர் 18 – தீபாவளி பண்டிகை (புதன்கிழமை)

டிசம்பர் 1 – மிலாதுநபி (வெள்ளிக்கிழமை)

டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் (திங்கட்கிழமை)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  2017–ம் ஆண்டில் மொத்தம் 22 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.  இதில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 5 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.