Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

வீடியோ; நீங்கள் தேர்வு செய்த அதிபர் இதனையும் செய்வார்! டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரசாரத்தின் போது குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் சில இடங்களில் பேசிய பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. குடியரசு கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பும் காணப்பட்டது. மேலும் கருத்துக்கணிப்புகளும் அவருக்கு எதிராகவே அமைந்தன.

ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

இதற்கிடையே டிரம்பிற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. பெண்கள் டொனால்டு டிரம்பிற்கு எதிரான வாசகங்கள் எழுந்திய பேனர்களை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். டிரம்ப் வெற்றிப் பெற்று இருந்தாலும், மொத்த வாக்கு எண்ணிக்கையில் ஹிலாரியே அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளார். டொனால்டு டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்துப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் அமெரிக்காவில் நேரிட்டு உள்ளது. சமூக வலைதளங்களிலும் போராட்டம் வெடித்து உள்ளது.

டொனால்டு டிரம்பிற்கு எதிராக பெண்களே அதிக அளவி திரண்டு உள்ளனர். தேர்தலின் போதும் டொனால்டு டிரம்பிற்கு எதிராக பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இப்போதைய போராட்டமும் சவாலாகி உள்ளது. கல்லூரி மாணவர்கள், மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டொனால்டு டிரம்ப் டபிள்யூ.டபிள்யூ.இ. விளையாட்டில் செய்த சில்மிஷங்கள் எல்லாம் இப்போது வைரலாக பரப்பட்டு வருகிறது. உங்களுடைய அதிபர் இதனையும் உங்களுக்கு செய்வார் என்ற எச்சரிக்கையுடன் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.