Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு தனி ஒருவருக்காக படம் ஓட்டிய சினிமா தியேட்டர்


500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை 10–ந் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்து இருந்தவர்கள், நேற்று வங்கிகளுக்கு சென்று அவற்றை கொடுத்துவிட்டு வேறு ரூபாய் நோட்டுகளை வாங்க தொடங்கி இருக்கிறார்கள். இன்று முதல் வங்கி ஏ.டி.எம்.கள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதனையடுத்து வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க மக்கள் கூட்டமாக கூடி பணத்தை எடுத்து வருகின்றனர்.

பணம் பற்றாக்குறையால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.  இந்நிலையில்  அகமதாபாத்தில் தனி ஒருவருக்காக சினிமா படம் காண்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் பட்டேல் கூறியதாவது:

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதால் சினிமா டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. இதனால் எங்களது வியபாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.