Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

புதிய நோட்டு தான் வேண்டும் என கேட்டு ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி சிக்கினார்


கோலாப்பூரில் புதிய நோட்டு தான் வேண்டும் என கேட்டு ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி அதிகாரி சிக்கினார்.

புதிய நோட்டு தான் வேண்டும்
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் சோம்நாத் (வயது52). இவர் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கேட்டு, கோலாப்பூர் மாவட்ட கல்விதுறை அதிகாரியிடம் மனு கொடுத்தார்.

மனுவை பரிசீலித்த கல்விதுறை அதிகாரி சந்திரகாந்த் ஏக்நாத் (வயது45) ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் பதவி உயர்விற்கு அரசிடம் சிபாரிசு செய்வதாக கூறினார். மேலும் லஞ்ச பணம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக வேண்டும் என்றார்.

கையும் களவுமாக பிடிப்பட்டார்
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சோம்நாத் கோலாப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனையின் படி சோம்நாத் நேற்று மாலை 6 மணியளவில் வங்கியில் இருந்தும், உறவினர்களிடம் இருந்து வாங்கிய ரூ.35 ஆயிரத்தை கல்விதுறை அதிகாரியான சந்திரகாந்த் ஏக்நாத்தை சந்தித்து கொடுத்தார்.

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கி ஆர்வமாக எண்ணிக்கொண்டு இருந்த சந்திரகாந்த் ஏக்நாத்தை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 17 புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும், 100 ரூபாய் நோட்டு 10–யையும் பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சந்திரகாந்த் ஏக்நாத் மீது வழக்குப்பதிவு அவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.