தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும், எழுதுவதற்கும் பழகிக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டனில் இருந்து வந்த சிறப்பு டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சிறப்பு டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக, சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சுழற்சி முறையில் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
எழுதுவதற்கு பயிற்சி
தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் மாலை சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். தனி அறைக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். நேற்று அவருக்கு பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் காலையில் இருந்தே உடற்பயிற்சி அளித்தார். இதற்காக காலை 6.40 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் இரவு வரை அங்கேயே இருந்தார்.
மேலும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று எழுதுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருக்கிறார்.
தொண்டர்கள் உற்சாகம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, நேற்று தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் இரா.தாஸ் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். மேலும், ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பவும் பல்வேறு பிரார்த்தனைகள் ஆஸ்பத்திரி முன்பு நடைபெற்றது.
அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜினி சீனிவாசன் தலைமையில் துர்க்கை அம்மன் பூஜை நடந்தது. இதேபோல், விளக்கு பூஜையிலும் அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் கலந்துகொண்டனர். நேர்த்திக்கடனாக 108 தேங்காய்களும் உடைக்கப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகம் அடைந்தனர்.
வைகைசெல்வன் பேட்டி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வைகைசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார். உடல்நல ஆரோக்கியம், இயற்கை சுவாசம், இயல்பான வாழ்க்கை, வழக்கமான உணவு, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் மதிநுட்பம், கருத்துகளை விரிவாக வெளிப்படுத்தும் விணை திட்பம், பத்திரிகைகளை உள்நோக்கும் விசாலமான பார்வையோடு இருக்கிறார். இதற்கெல்லாம் உலகளாவிய தமிழ் நெஞ்சங்களின் வாழ்த்துகள், வழிபாடுகள், பிரார்த்தனைகள் தான் காரணம்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்புகின்றார். விரைவில் வீடு திரும்ப உள்ளார். உங்களைப்போல நாங்களும் அந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிக விரைவில் வீடு திரும்பி, கோட்டையில் கோப்புகளை பார்க்கக்கூடிய நாள் தான் எங்களுடைய நன்னாள், பொன்னாள், திருநாள். அந்த நாளை தாய்த்திரு நாளாக நாங்கள் கொண்டாடி மகிழ்வோம். அந்த தாய்த்திருநாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 100 ஆண்டு காலம் வாழ்ந்து தமிழ் உலகத்துக்கு தொண்டு ஊழியம் செய்வார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.