Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 17, 2016

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆடம்பர நகை அணிந்து வந்த டிரம்ப் மகள்


அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டொனால்டு டிரம்பின் மகள் ஈவான்கா அணிந்திருந்த ஆடம்பர நகை ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதற்கு பிறகு முதல் முறையாக அவருடன் இணைந்து அவருடைய மகள் ஈவான்கா டிரம்ப் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அடிப்படையில் விலைமதிப்பற்ற ஆபரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் ஈவான்கா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னுடைய நிறுவனம் தயாரித்த 10,800 டொலர் மதிப்பிலான தங்க காப்பு ஒன்றை அணிந்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஈவான்கா டிரம்பின் ஊழியர் ஒருவர் பத்திரிகைகளை தொடர்புக்கொண்டு ’ஈவான்கா டிரம்ப் அணிந்திருந்த நகையை விளம்பரம் செய்யுமாறு’ அதன் தகவல்களை அளித்துள்ளார்.

இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது அவரும் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் எந்த பொருளையும் லாப நோக்குடன் விளம்பரபடுத்தக்கூடாது என்பது விதியாகும்.

ஆனால், ஜனாதிபதியின் மகள் ஈவான்கா டிரம்ப் தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பை பிரபலப்படுத்த தனது தந்தையின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை சுயநலத்திற்காக பயன்படுத்திகொண்டார் என தற்போது கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டுள்ள தகவலில் ‘டொனால்ட் டிரம்பின் குடும்பமே தொழில் முறை குடும்பம். எதை செய்தாலும் வருமானத்தை ஈட்ட தான் முயற்சி செய்வார்கள். இன்னும் இதுபோன்ற அநியாயங்கள் தொடர்ந்து நடைபெறும்’ என விமர்சனம் செய்துள்ளனர்.

ஈவான்கா டிரம்பின் செயலுக்காக கண்டனம் எழுந்ததை தொடர்ந்து ஈவான்காவும் அவருடைய நிறுவனமும் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், பொது நிகழ்ச்சி ஒன்றில் மகள் ஈவான்காவை ஆபாசமான முறையில் தந்தை டொனால்ட் டிரம்ப் கட்டிபிடித்தது தவறு எனவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.