Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு: கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?


மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள்,  மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 9 ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே பிரசாத்  தலைமையிலான தேர்வுக்குழு விராட் கோலி தலைமையிலான அணியை தேர்வு செய்கிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்று ஒயிட் வாஷ் செய்ததால் அணித்தேர்வில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று  தெரிகிறது.

ஷிகர் தவான் கைவிரல் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால், அணியில் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மூத்த வீரர் கம்பீருக்கு வாய்ப்பு கிட்டியது. ஓரளவு சிறப்பான ஆட்டத்தை கம்பீர் வெளிப்படுத்தினார்.

லோகேஷ் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆடும் உடல் தகுதியை எட்டும் பட்சத்தில் கம்பீர், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகிய மூவரில் யாருப்பு வாய்ப்பு கிடைக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இஷாந்த் ஷர்மா உடல் நலம் தேறி உள்ளதால், டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.