சென்னை புதுப்பேட்டை கூவம் ஆற்றில் நேற்று மாலை சாக்கு மூட்டை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த சிலர் அந்த மூட்டைக்குள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கதைவிட்டனர். இந்த தகவல் அந்தப்பகுதி முழுவதும் பரவியதால் அதனைப் பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்தவழியாக கார், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தனர்.
இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் கிடைத்து போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்துவந்தனர். போலீசார் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதற்குள் பணக்கட்டுகள் இல்லை. தெர்மாகோல் அட்டைகள் இருந்தன. இதைப்பார்த்து அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் ஏமாற்றம் அடைந்து கலைந்து சென்றனர். அதன்பின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.