சென்னை,
பணத்தட்டுப்பாடு காரணமாக கட்டிட தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. வேலை இல்லாமல் இருக்கும் வட மாநில கட்டிட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது.
கட்டிட தொழில் பாதிப்பு
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மக்களிடம் பணம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
பணம் இன்றி தொழில் மற்றும் வர்த்தகம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. இந்த நிலையில் பணத்தட்டுப்பாடு காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் கட்டுமான தொழில் மிகவும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக வட மாநில கட்டுமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
படையெடுப்பு
இதனால் அவர்கள் கூட்டம், கூட்டமாக சொந்த ஊருக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு உள்ளது.
வட மாநிலத்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ரெயிலுக்காக காத்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது, அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது.
ஊதியம் வழங்கவில்லை
இதுகுறித்து கட்டுமான தொழிலாளி ஷானேவரஸ் (வயது 21) என்பவர் கூறும்போது, ‘நாங்கள் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள். சென்னை மேடவாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்து வந்தோம்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு வருவதால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக வேலையில்லாமல் இருந்து வந்தோம். இதற்கு முன்பு வேலை செய்ததற்கு, ஊதியமும் வழங்கவில்லை. இதனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சொந்த ஊருக்கு செல்கிறோம்.’
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.