Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்


கியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று மரணமடைந்தார். அவரது மரைவுக்கு உலக தலைஅவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மரணத்தை அந்நாட்டு குடிமக்களில் ஒரு பிரிவினர் வீதிகளில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ இன்று அதிகாலை நேரத்தில்  மரணத்தை தழுவியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய கியூபா குடிமக்கள் அவருடைய மரணச்செய்தியை கேட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

பிடல் காஸ்ட்ரோ மரண செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாலை நேரத்தில் அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டுள்ளனர்.

சாலைகளில் கூடிய பொதுமக்கள் மது பாட்டில்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர்.

அப்போது, கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய ஒருவர்  பேசியபோது, ‘கியூபாவில் இப்போது தான் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

கியூபாவில் இப்போது தான் சுதந்திரமும் ஜனநாயகமும் மலர்ந்துள்ளது.

கியூபாவில் உள்ள குடிமக்கள் தங்களுடைய உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படும் உரிமையை பிடல் காஸ்ட்ரோ பறித்துவிட்டார். பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புரட்சியாளர் என்பதை விட அந்நாட்டின் சர்வாதிகாரி என்பது தான் சரியானது’ என கருத்து தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.