வீட்டின்மேல் விமானம் விழுவது போன்ற பயங்கர சத்தம் கேட்டது நேரில் பார்த்தவர்கள் பேட்டி
வீட்டின்மேல் விமானம் விழுவது போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
கீழே விழுந்தது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கரூர் மாவட்ட எல்லையில் உள்ள கொளந்தபாளையம் கிராமத்தில் நேற்று பகல் 10.30 மணிஅளவில் வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் வட்டவடிவிலான மர்மபொருள் விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டதும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்மபொருள் விழுந்ததை நேரில் பார்த்த விவசாயி தண்டபாணி (வயது 50) மற்றும் சிலர் கூறுகையில்,`` நேற்று காலை 10.30 மணிஅளவில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது வானத்தில் இருந்து வட்ட வடிவத்தில் கருப்புநிற தோற்றத்தில் ஒரு பொருள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது. வீட்டின்மேல் விமானம் விழுவது போல் பயங்கர சத்தம் கேட்டது.
அப்போது நாங்கள் நின்று கொண்டு இருந்த வீட்டின் பக்கத்தில் உள்ள மரக்கிளைகளில் மோதியபடி அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து வேகமாக சுற்றியபடி நின்றது. அதன்அருகில் செல்ல பயமாக இருந்தது.
இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் துணிச்சலுடன் பொருள் விழுந்த இடத்துக்கு சென்று பார்த்தோம். அது கருப்பு நிறத்தில் இரும்பு போன்று வட்ட வடிவத்தில் காணப்பட்டது. அந்த பொருள் சுமார் 10 கிலோ எடை இருக்கும். அதன் இருபக்கமும் ஓட்டைகள் இருந்தது. விழுந்த இடத்தில் அதில் உடைந்த சிறுசிறு துகள்களும் கிடந்தன``. என்றனர்.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தென்னிலை நிலவருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துரைச்சாமி, முனியப்பன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும் உடனே தகவல் தெரிவித்தனர். வானில் இருந்து விழுந்த அந்த மர்மபொருள் அங்குள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.