அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல சட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு தற்போதையை ஜனாதிபதியான ஒபாமாவை டொனால்ட் டிரம்ப் நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல சட்ட ஆலோசகரான கிரிஸ்டோபர் பீட்டர்சன்என்பவர் ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘டொனால்ட் டிரம்ப் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்கும் அளவிற்கு அவர் மீது ஒரு வலிமையான குற்றச்சாட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டிரம்ப் பல்கலைக்கழகம் Trump University என்ற பல்கலைக்கழகத்தை தொடங்கிய டிரம்ப் கடந்த 2010 ஆண்டு அதனை அவசர அவசரமாக மூடினார்.
ஏனெனில், இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் முதலீடு செய்வதற்கும் வாடிக்கையாளர்களை தூண்டிவிடும் வகையில் அவர் சட்டவிரோதமான விளம்பரங்களை வெளியிட்டார்.
அமெரிக்க நாட்டில் உண்மைக்கு எதிரான தகவல்கள் கூறி வாடிக்கையாளர்களை தூண்டிவிடுவது சட்டத்திற்கு எதிரான செயலாகும். ஆனால், டொனால்ட் டிரம்ப் இதனை கருத்தில் கொள்ளாமல் தவறான விளம்பரங்கள் மூலம் ஆதாயம் பெற்றுள்ளார்.
இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்ற நிலையிலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்.
மேலும், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான பொதுமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் ஒரு சில வாரங்களில் அவர் பதவி பறிக்கப்படும்.
இதனை செயல்படுத்தினால் டிரம்பிற்கு அடுத்த நிலையில் உள்ள துணை ஜனாதிபதியான மிகெ பென்ஸ் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்பார்.
இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக கிரிஸ்டோபர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.