Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்த்ரி நீக்கம் அவசியம் ரத்தன் டாடா விளக்கம்


புதுடெல்லி,

டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்த்ரியின் நீக்கம் அவசியம் என்று ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தகப் பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் சைரஸ் மிஸ்ட்ரி (48 வயது) செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உரிய விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், சைரஸ் மிஸ்ட்ரி லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சைரஸ் மிஸ்ட்ரியை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, அடுத்த 4 மாதங்களுக்கு ரத்தன் டாடா செயல்படுவார். அதன்பின், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டாடா குழும ஊழியர்களுக்கு ரத்தன் டாடா எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்த்ரி நீக்கம் அவசியம். நீண்ட பரிசீலனைக்கு பிறகே மிஸ்திரியை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.