Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

இரு குழந்தை திட்டத்தாலும் பயன் இல்லை வேலைக்கு ஆள் இன்றி திண்டாடும் சீனா


உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையை கொண்ட சீனாவில், ‘ஒரு தம்பதியர், ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் அங்கு இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்தது அதிவேகமாய் முதுமையடையும் நாட்டு மக்கள் அதிகரித்து வந்தனர்.இதனால் வேலை செய்ய ஆள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.

137 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 21 கோடியே 20 லட்சமாக உள்ளது. இது 2014–ம் ஆண்டு நிலவரம். இது நாட்டு மக்கள் தொகையில் 15.5 சதவீதம் ஆகும். சீனாவில் 2030–ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம்பேர், 65 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள் என்று ஐ.நா. கணித்துள்ளது.

இதையடுத்து ‘ஒரு தம்பதியர், ஒரு குழந்தை’ கொள்கையை தளர்த்தி, ‘ஒரு தம்பதியர், இரு குழந்தைகள்’ என்ற கொள்கையை அமல்படுத்த சீன அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு முடிவு எடுத்து அறிவித்தது. இந்த கொள்கை, ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வழிபிறந்துள்ளது.

சீனா அதன் இரு குழந்தைக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு பிறக்கவிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 5.7 சதவீதம் அதிகமாய் இருக்கும் என்று கண்க்கிடபட்டு உள்ளது.

இருப்பினும் வேசெயவதற்கு ஆள் கிடைக்காத நிலைக்கு அது போதாது என்று அது குறிப்பிட்டது.பொருளாதார  வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு புதிய வழிகளைக் காணும் நெருக்குதலுக்குச் சீனா உள்ளாகி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.