கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு டிசம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, அரசின் முக்கிய சேவைகளுக்கு இன்று வரை பழைய தாள்களை மக்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடு இன்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ள நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, வங்கிகளில் இன்று நள்ளிரவு முதல் பழைய ரூ.500, 1000 தாள்களை மாற்ற முடியாது.
தண்ணீர், மின் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 15 ஆம் தேதி வரை பழைய ரூ. 500,1000 தாள்களை மட்டும் பயன்படுத்தலாம். பழைய ரூ. 500,1000 நோட்டுக்களை வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் வரவு வைத்துக்கொள்ளலாம். வெளிநாட்டினர் மட்டும் தங்கள் நாட்டு பணத்தை வாரத்துக்கு ரூ. 5 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.வெளிநாட்டு பயணிகள் பாஸ்போர்ட்டை காண்பித்து பணத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய, மாநில உள்ளாட்சி பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த பழைய ரூ.500 தாள்களை பயன்படுத்தலாம். மேலும் செல்போன் சேவை கட்டணம் செலுத்த பழைய ரூ. 500 ஐ பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2 ஆம் தேதி வரை கட்டணம் கிடையாது. அதன்பிறகு 15 ஆம் தேதி வரை பழைய ரூ.500 தாள்களை கொண்டு சுங்க கட்டணம் செலுத்தலாம். .

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.