ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டதும் நிறைய பேர் அந்த நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கமாக வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 8-ந்தேதி இரவு பல நகை கடைகளில் இரவு நீண்ட நேரம் வியாபாரம் நடந்துள்ளது.
இதையடுத்து நாடெங் கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நகைகடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் பழைய நோட்டுகளை கொடுத்து விட்டு தங்கம் வாங்கி சென்றது யார்-யார் என்ற ஆய்வை நடத்தி வருகிறார்கள்.
இந்தியா முழுவதும் சுமார் 25 லட்சம் நகை விற்பனையாளர்கள் உள்ளனர். இவற்றில் பெரிய நகை கடைகளை மட்டுமே சுங்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். இந்தியா முழுவதும் 25 நகரங்களில் இந்த கண்காணிப்பு மிகவும் ரகசியமாக நடந்தது.
அப்போது 400 நகை கடைகளில் கடந்த 4 நாட்களாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சட்ட விரோத மான வகையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த 400 கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதில் சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக தெரிய வந்தால் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்புகிறார்கள். ஒரு நகைக் கடைக்காரர் மட்டும் கடந்த 3 நாட்களில் 201 கிலோ தங்கம் விற் பனை செய்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நகை கடையின் கணக்கு களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.