Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

ஜார்கண்ட்: எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்தில் பயங்கர வன்முறை. 9000 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்



பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய முழு அடைப்புப் போராட்டம் பயங்கர வன்முறையாக வெடித்ததால் மாநிலம் முழுவதும் சுமார் 9000 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும் பல இடங்களில் வணிகக் கடைகள் சூறையாடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜார்கண்டில் ஆளும் பாஜக.,வை கண்டித்து, காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்த போராட்டத்தில் மாணவர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.இதில், மாணவர் அமைப்புகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின்போது, ராஞ்சி, தும்கா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது. பல இடங்களில் அரசுப் பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை 9000க்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, வணிகக் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதால், பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.