November 8, 2016
பணத்திற்காக விற்பதற்கு குழந்தைகளை கடத்திய வழக்கில் 9 பேர் கைது!
நெல்லை மாவட்டத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட 2 ஆண் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த அருணாசலம் - தேவிகா தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் தத்து எடுக்க விரும்பியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் நைனார் என்பவர் உரிய சட்ட ஆவணங்களின்றி குழந்தை ஒன்றை விற்றுள்ளார்.
இது குறித்து அருணாசலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று மதியம் 7 பேரை ஆலங்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் விற்ற ஆண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வில்சன் - குமாரி தம்பதியினரிடம் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தை ஒன்றை ஆலங்குளத்தில் மற்றொரு கும்பல் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அந்த குழந்தையையும் மீட்டு ஆலங்குளம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேவானந்த் மற்றும் குழந்தை தத்து மைய ஒருங்கிணைப்பாளர் முகமது ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு குழந்தைகளும் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பணத்திற்காக விற்பதற்கு குழந்தைகளை கடத்திய வழக்கில் 9 பேர் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.