Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

வங்கியில் 8 மணி நேரம் காத்திருந்தும் பணம் கிடைக்காததால் மக்கள் போராட்டம்!



சென்னை வண்ணாரப்பேட்டை வங்கி ஒன்றில், எட்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தவர்களிடம் பணம் இல்லை என அறிவித்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழைய, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து 20 நாட்கள் ஆகியும், பணப்புழகத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இதனிடையே, கடந்த இரு நாட்களாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்தது இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பொதுமக்கள் காத்திருந்தனர்.

திடீரென வங்கியில் பணம் இல்லை என நிர்வாகம் அறிவித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.