Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்த போலீஸார்



பழைய 500, 1000 ரூபாய் தாள்களில் ரூ.20 லட்சம் கொண்டு சென்ற பெண்ணிடம் இருந்து, ரூ.8.50 லட்சத்தைச் சுருட்டிய 3 கான்ஸ்டபிள்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் பாயந்தர் டிவிஷனுக்கு உட்பட்ட நயா நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 கான்ஸ்டபிள்கள், கடந்த 20-ம் தேதி இரவு பாயந்தர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பெண் ஒருவரை வழிமறித்து சோதனையிட்ட போது, அவரிடம் பழைய 500, 1000 ரூபாய் தாள்களில் ரூ.20 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடமோ, வரித்துறை அதிகரிகளிடமோ கான்ஸ்டபிள்கள் தகவல் தெரிவிக்கவில்லை.
மாறாக, அப்பெண்ணை மிரட்டி, ரூ.8.50 லட்சத்தை 3 கான்ஸ்டபிள்களும் பறித்துக் கொண்டனர். அப்பெண் கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பதாக எண்ணிய அவர்கள், அதுகுறித்து யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாது என்றும் நம்பினர்.
இதுகுறித்து நயா நகர் போலீஸ் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, 3 கான்ஸ்டபிள்கள் மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 392-வது மற்றும் 34-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் 3 பேரும் கைது செய்யப்படவில்லை

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.