November 8, 2016
டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்ற பார் ஊழியர்கள் 8 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நண்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செஞ்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை, பார்களில் கள்ளத்தனமாக காலை முதல் விற்கப்படுவதாக புகார் வந்தது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் போலீசார் சோதனையிட்டனர். இதில் செஞ்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் அனுமதி இன்றி மதுபானம் விற்றதாக 8 பார் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்ற பார் ஊழியர்கள் 8 பேர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.