Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

செல்லாத ரூபாய் நோட்டுகளை வேறு ஒருவரது வங்கி கணக்கில் செலுத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை


கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8–ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த மதிப்பிலான பணத்தை டிசம்பர் 30–ந்தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டும் உள்ளது.

ஆனால், கடந்த 10 நாட்களில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்தான் வாடிக்கையாளர்களால் தங்களது வங்கி கணக்குகளில் மிக அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ரூ.2½ லட்சத்துக்கும் அதிகமான தொகையை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்து இருக்கின்றனர். இது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியாக இருக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

மேலும், ரூ2½ லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்பவர்கள் வருமான வரி இலாகாவின் அபராத நடவடிக்கையை சந்திக்கவேண்டி இருக்கும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் ஒருவரின் வங்கிக் கணக்கில் 2½ லட்சத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் வருமான வரி இலாகா இறங்கி உள்ளது.

இதையடுத்து வருமான வரிச்சட்டம் 133(6)–ன் கீழ் அவர்களுக்கு வருமான வரி இலாகா தனது இணையதளம் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வசிக்கும் ஏராளமானோருக்கு இந்த நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் வருமான வரித்துறை தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

செல்லாத ரூபாய் நோட்டுகளை வேறு ஒருவரது வங்கி கணக்கில் செலுத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் தெரிந்த நபர் கணக்கில் கருப்பு பணத்தை செலுத்தி மாற்ற முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 8–ந்தேதிக்கு பிறகு திடீரென ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை அதிக அளவில் செலுத்தி இருந்தால் அவர்களது வங்கிக் கணக்குகளும் வருமான வரி இலாகாவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’’ என்றும் வருமான வரி இலாகா அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.