November 29, 2016
பெங்களூரு பெண்ணிடம் கணக்கில் வராத ரூ 79 லட்சம் பணம்... அத்தனையும் ரூ 2000 நோட்டு!
பனஸ்வாடி பகுதியைச் சேர்ந்த பெ ண் ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 79 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அத்தனையும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக உள்ளதால் போலீசால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து புதிய 500 மற்றும 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் பெங்களூருவின் பனஸ்வாடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த 79 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அவை அத்தனையும் 2000 ரூபாய் நோட்டுகளாய் இருப்பதைக் கண்ட போலீசார், நபர் ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் தங்களுக்கு எப்படி இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த மொத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு பெண்ணிடம் கணக்கில் வராத ரூ 79 லட்சம் பணம்... அத்தனையும் ரூ 2000 நோட்டு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.