November 20, 2016
உ.பி.யில் கோர விபத்து: பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து, 63 பேர் உயிரிழப்பு, 150 பேர் காயம
உத்தரபிரதேச மாநிலத்தில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புக்ராயன் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்து, சேதம் அடைந்து உள்ளன. விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரையில் 45 பேரது சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் காலையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 150 பேர் காயம் அடைந்து உள்ளனர். விபத்தினால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) தல்ஜீத் சிங் சவுதாரி பேசுகையில், இதுவரையில் நாங்கள் விபத்து நேரிட்ட இடத்தில் இருந்து 45 சடலங்களை மீட்டு உள்ளோம்,” என்றார். மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நிலையானது கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்திய ரெயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா பேசுகையில், “விபத்து நேரிட்ட பகுதிக்கு மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று உள்ளனர். நாங்கள் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்,” என்றார்.
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், விபத்து நேரிட்ட பகுதியில் நடைபெறும் மீட்பு பணிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்குமாறு மாநில டிஜிக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையே மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். ரெயில் விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய ஊருக்கு செல்வதற்கு பஸ் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. வட மத்திய ரெயில்வே செய்தித் தொடர்பாளர் விஜய் குமார் பேசுகையில், எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியானது மிகவும் சேதம் அடைந்து உள்ளது, அதனால் உயிரிழப்பு அதிகரித்து இருக்கலாம், என்று கூறிஉள்ளார்.
மாவட்ட மற்றும் ரெயில்வே அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4-ஏசி பெட்டிகளும் கவிழ்ந்து உள்ளது என்றார். இதற்கிடையே கான்பூர் பிராந்திய டிஐஜி ராஜேஷ் மோடாக் பேசுகையில், ரெயிலின் இரண்டு பெட்டிகள் கடும் சேதம் அடைந்து உள்ளது, அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்து உள்ளார்.
ரெயில்வே விபத்து தொடர்பாக தகவல்களை தெரிவித்துக் கொள்ள உதவி எண்களை அறிவித்து உள்ளது. பொதுமக்கள் இந்தூர் - 07411072, உஜ்ஜைன் - 07342560906, ராட்லாம் - 074121072, ஒராய் - 051621072, ஜான்சி - 05101072, போக்ராயா - 05113270239 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
63 பேர் உயிரிழப்பு
கான்பூர் ஐஜி ஷாகி அகமது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், கான்பூர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்து உள்ளது,” என்று கூறிஉள்ளார்.
உ.பி.யில் கோர விபத்து: பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து, 63 பேர் உயிரிழப்பு, 150 பேர் காயம
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.