November 1, 2016
மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் 60ம் ஆண்டினையொட்டி கருணாநிதி வாழ்த்து
மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் 60ம் ஆண்டினை நினைவு கூர்ந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, அதனை ஒட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தான், மொழிவழி மாநிலங்கள் பிரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவை தனி மாநிலமாக பிரிந்து அறுபது ஆண்டுகள் நிறைவடைவதாகக் கூறியுள்ள கருணாநிதி, இதற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்டோர் பாடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும், “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட அப்போதிருந்த காங்கிரஸ் அரசு மறுத்ததாகக் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, “மதராஸ்” என்றிருந்த பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை 1967ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதியன்று அண்ணாதான் முதலமைச்சராக இருந்து சட்டப் பேரவையில் கொண்டு வந்ததாக நினைவு கூர்ந்துள்ளார்.
மொழிவழி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு அறுபது ஆண்டு நிறைவு பெறுகின்ற இந்நேரத்தில் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, தமிழ்நாடு என்று பெயர் அமைய பாடுபட்ட தலைவர்களை போற்றுவதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் 60ம் ஆண்டினையொட்டி கருணாநிதி வாழ்த்து
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.