மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
முறையான கணக்கு இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு 60 சதவீத வரி, அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதேநேரம், இந்த பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பிறரின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக, ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகளில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரி மற்றும் வரி மீது 200 சதவீத அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வருமான வரித் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, தங்களிடம் அதிக அளவில் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். அத்துடன் அந்தப் பணத்தை எரித்து அல்லது அழித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையில் முறையான கணக்கு இல்லாமல், பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதன்படி, வரி மற்றும் அபராதமாக 45 சதவீதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வோருக்கு அதைவிட அதிகமாக வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதாவது, வெளிநாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டதைப்போல 60 சதவீத வரி, அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.
மின்னணு பணப்பரிமாற்றம்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தனியார் துறை உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
பின்னர் அவர் கூறும்போது, “மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக நிதித் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்” என்றார்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.